Monday, August 28, 2017

நெல்மணி

மண்ணில் புதைத்து வைத்தாலும்  
நானும் திமிறி எழுந்தேன் உங்களுக்காக 

நான் வளரும் பருவ காலம் பல 
இயற்கை மருந்துகளை கொடுத்து வளர்ந்தேன் 

இப்போது பல செயற்கை மருந்துகளை 
கொடுத்து என்னையும் மண்ணையும் கெடுத்தார்கள் 

எங்கள் பலன்கள் குறையத்துவங்கியதும் 
எங்களை குறை சொன்ன மனிதர்கள் 
இது அவர்களின் தவறு என்று உணரவில்லை 

எங்கள் பருவ காலம் முடிந்து 
அறுவடை காலத்தில் அறுவடை செய்வார்கள் 

எங்களை பிரித்தெடுத்து அடித்து 
சகோதர சகோதரிகளை தரம் பிரித்து வைப்பார்கள்

நாங்கள் பிறந்த வீட்டில் இருந்து 
புகுந்த வீட்டுக்கு செல்வதை போல் நாங்களும் 
தயாராவோம் 

நாங்கள் இவ்வளவு தூரம் கடந்து வந்து 
எங்களை சாப்பிடாமல் வீணடிப்பார்கள்

உங்கள் வீட்டில் நாங்கள் வந்தால் எங்களை 
வீணடிக்காமல் இயலாதவர்களுக்கு கொடுங்கள் 
இப்படிக்கு 
உங்கள் நெல்மணி 


பாகா   

Monday, August 14, 2017

வாழ்க்கை ஒரு பயணம்

முடிவில்லா பயணத்தில் வழியறியா 
பல பாதைகள் 

பாதைகளின் வழி நடுவே பார்த்திடாத 
பல முகங்கள் 

பார்த்து பழகிய சில முகங்களின் மனங்களில் 
மாட்டிய பல முகமூடிகள் 

எது நம் பாதை என அறிவதற்குள் தடுமாறும் 
பல வழித்தடங்கள் 

வெற்றியை நோக்கி நெருங்கும் வேளையில் 
வரும் பல தோல்விகள் 

தோல்வி தான் வரும் என்று நினைத்த வேளையில் 
வரும் பல வெற்றிகள் 

நாம் நினைத்த இடத்தில் இறங்க வாழ்க்கை 
பேருந்து  இல்லை 

காற்றடித்து காற்றின் திசையில் பறக்கும் காகிதம் போல் 
சூழ்நிலை உருவாக்கும் பாதையில் நம்மை அறியாமல் 
செல்வதே நம் வாழ்க்கை பயணம் 

பாகா   

Monday, August 7, 2017

நான் தான் பொய்

நான் இல்லாமல் எவருமே இல்லை 
இவ்வுலகில் 
நன்மைக்காகவோ அல்லது தீமைக்காகவோ 
என்னை உபயோகப்படுத்துவர் பலர் 

என் மீது பயம் கொண்டவர் சிலர் 
அதனால் அவர்கள் வாழ்வில் அடைந்தனர் 
நல்ல பலன் 

நேர்மைக்கு எதிரானவன் நான் 
உண்மைக்கு புறம்பானவன் நான் 
நான் ஒரு முறை உங்கள் வாழ்வில் வந்தால் 
பன்மடங்கு பெருகி வரும் பிரச்னைகள் 

நான் யார்? நான் யார்? 
நான் தான் பொய் 
எனை கொண்டவர் எவரும் இவ்வுலகில் 
உயர்ந்தவரில்லை 

என்னை உணர்ந்து திருந்தியவர் இவ்வுலகில் 
தாழ்ந்தவர் இல்லை 
பொய் கூறி அதை உணர்ந்து திருந்தியவர்களை 
மறந்து மன்னியுங்கள்!!


பாகா