Monday, September 11, 2017

நீரை வீணாக்காதீர்

நான் இன்றி இங்கு எந்த உயிருமில்லை
எனை காணாத எவரும் இவ்வுலகில்
இல்லை


நீர் தானே என்று நீ வீணாக்கினாய்
உன் எதிர்கால வாழ்க்கையை தெரிந்தே
பாழாக்கினாய்


மேகத்தில் இருந்து தான் பிறக்கும் நேரம்
உன் தாத்தாக்கள் என்ன செய்தார்கள்
அந்நேரம்


வீட்டு மாடத்தில் பாத்திரங்கள் திறந்து வைப்பர்
என்னை துளி கூட ஒதுக்காமல் நிரப்பி
உபயோகிப்பர்


நீ இன்று என்னை இப்படி கண்டதுண்டா
நான் சாக்கடையில் கலப்பதும் ஏன்
உனக்கு புரிவதுண்டா


எல்லாமே நீ செய்யும் தவறு மனிதா
உனை நீயே திருத்திக்கொள் உயர்வு
மனிதா

உன் தலைமுறைக்கு இருப்பதால் வீணடிக்கிறாய்
உன் எதிர்கால சந்ததியரின் வாழ்வை
சீரழிக்கிறாய்



பாகா

Monday, September 4, 2017

துணிந்து எழு

துரோகிகள் நம்மை சூழ்ந்து முதுகில் குத்தும் நேரம் 
கிழிந்து போகும் காகிதம் போல் அல்லாமல் 
நெருப்பை உமிழும் எரிமலை போல் பொங்கி எழ வேண்டும் 

நம்மை பிரித்தாளும் துரோகிகளை இனம் கண்டுகொண்டு 
தனி தனியே பிரிந்து விழும் நூலைப்போல் இல்லாமல் 
ஒற்றுமையாக இருந்து ஒளிகொடுக்கும் திரியை போல் 
சேர்ந்து பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும் 

மக்களுக்கு சேவகம் பார்ப்பதற்கே அவர்கள் வேலை 
ஆனால் அதிகாரம் கொண்டு ஒடுக்க நினைத்தால் 
துணிந்து எழுந்து நியாயமான எதிர்ப்பை காட்டுங்கள்  

மாணவப்பிஞ்சுகளே நம் தேசத்தின் தூண்கள் 
குழந்தைகளை மனமுடைய செய்யும் அதிகாரவர்கத்தை ஒடுக்கி 
அனைவரும் சேர்ந்து பாடம் புகட்டுங்கள் 

அதிகாரம் நாம் கொடுத்தது என்பதை அவர்கள் செவிப்பறை 
கிழிய சொல்லுங்கள் 
உங்கள் கோபத்தை அணைய விடாமல் நெருப்புக்கு 
ஆக்சிஜென் கொடுப்பது போல் கோபத்தை அணையாமல் 
கொழுந்துவிட்டு எரிய பார்த்துக்கொள்ளுங்கள் 

அவர்களை செய்யும் தக்க நேரம் வரும் அப்போது மறக்காமல் 
மன்னிக்காமல் செய்யுங்கள்  பிஞ்சின் மனம் சாந்தி அடையட்டும்...

பாகா