Monday, March 27, 2017

பிரிந்து செல்வாயோ

என்று நான் உனைப் பார்த்தேனோ 
அன்று நீ என் மனதில் பதியவில்லை 

என்று உன்னுடன் பழகினேனோ 
அன்றே என் கண்களுக்குள் வந்து விட்டாய் 

உன் நகைச்சுவையான பேச்சில்
என்னை அறியாமல் மயங்கினேன் 

நீ என்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் 
இந்த உலகையே என் கைக்குள் கொண்ட 
சந்தோசத்தை உணர்ந்தேன் 

ஒரு நாள் உனை பார்க்காவிடில் 
இந்த உலகையே வெறுமையாய் 
நான் உணர்ந்தேன் 

பார்த்து பழகி என் மனதில் குடிவந்த 
நண்பனே உன்னை மிகவும் பிடிக்கும் 

பிடித்தவை எல்லாம் எனை விட்டு பிரிந்து போகும் 
வரம் எனக்கு நீயும் என்னை விட்டு 
பிரிந்து விடுவாயோ நண்பனே......!


பாகா    

Monday, March 20, 2017

என்ன தவறு செய்தேன்

என் நிழல் போல் தொடர்ந்து வந்த நீ 
தீடிரென்று தோன்றி மறையும் மேகங்கள்
போல் ஏன் மறைந்தாய் 

என்னிடம் பேசிப் பேசிக் கழித்த நீ 
இன்று நீ உன் முகம் கூட 
காட்டாமல் எங்கு போனாய் 

உன்னை நண்பன் என்று நினைத்த 
என்னை;நீ வெறும் நபர் 
என்று நினைத்து விட்டாயோ 

தவறு ஏதும் செய்திருந்தால் 
உரிமையாய் சுட்டிக் காட்டு 
ஆனால் தள்ளி வைத்து என் மனதைக் 
குத்திக் காட்டாதே 

என்றும் உன்னுடன் ஒரு நல்ல 
நட்பை விரும்பினேன் 
ஆனால் நீயோ என்னை வெறும் 
குப்பை என்று நினைத்து விட்டாயோ.......!?


பாகா 



Monday, March 13, 2017

உன்னைக் காதல் செய்

புதிதாய் காணும் ஒவ்வொருவரும் 
இவள் என்னவள் என்று கண்கள் கூறும் 
ஆனால் மனது கண்கள் கூறுவதை 
நம்பி ஏமாறாதே எனக் கூறும் 

நான் கண்கள் கூறியவற்றை நினைத்து 
ஆனந்தப்பட்ட சில நாட்களில் 
மனது வென்று விடும் 

இனிமேல் கண்களை நம்புவதில்லை 
என் காதலி என்னிடம் வரும் வரை 
அந்த இடத்தில் யாரையும் வைத்து ஏமாற விரும்பவில்லை 

என்னை என் காதலியை விட 
விரும்பும் ஒரு உயிர் உலகத்தில் உள்ளது 
ஆம் தினமும் என்னை காதலிக்கும் 
அந்த உயிர் என்னை மிகவும் ரசிக்கும் 

ஆம் அது வேறு யாருமில்லை நான் தான் 
நம்மைத் தவிர வேறு யாரால் நம்மை 
மிகவும் நேசிக்க முடியும் 
நம்மை காதலித்தால் வாழ்வு இனிதாகும்....!


பாகா 

Monday, March 6, 2017

சூரியனின் வெட்கம்

சூரியனிடம் வெட்கத்தை 
கண்டேன் 
மேற்கு வீட்டில் 
மேகம் எனும் திரைச்சீலையில் 
முகத்தை மறைத்துக் 
கொள்ளும் பொழுது.....!

பாகா