Monday, April 24, 2017

பெண்ணின் சொல்லாத காதல்

கண்டுவிட்டேன் இன்று உன்னை 
என்னுள் என்னை நான் புதிதாய் 
கண்டேன் 

மிக அருகில் நீ இருந்தும் இத்தனை நாள் 
எங்கோ உனை தினம் தினம் 
தேடி அலைந்தேன் 

என்று என் வாழ்வில் நீ வந்தாயோ 
அன்று என்னையே நான் அழகாய் 
கண்டேன் 

எனக்குள் நீ துளித்துளியாய் கலந்து விட்டாய் 
உன்னைப் பிரிக்க இனி என்னாலும் 
எந்நாளும் முடியாது 

ஒரு வேளை நீ பிரிந்து போனாலும் 
என்னால் உன்னுடன் இருந்த நினைவுகளை 
அழிக்க முடியாது 

நண்பனாய் இருந்த நீ என் 
மனதுக்குள் எப்போது காதலை விதைத்தாய் 
நீ என்னுடன் என் வாழ்வில் வந்தால் 
என் வாழ்வு சிறக்கும் 

ஆனால் அது சாத்தியமில்லை 
உன்னைப் போன்று ஒருவனை நான் 
இனிமேல் காண்பேனா என்று தெரியவில்லை 

ஆனால் உன் வாழ்வில் நீ நினைத்ததை 
அடைய இறைவனை வேண்டுவேன் 
என் உயிர் மூச்சு நிற்கும் வரை.........

பாகா 

Friday, April 14, 2017

தமிழ் புத்தாண்டு 2017

மண்ணில் பிறந்து பிறந்த மண்ணை தெய்வமாய் வழிபட்டு 

மண்ணிற்கு வளம் சேர்த்து
மண்ணை மட்டும் குளிர வைக்காமல் 
மக்களின் வயிறையும், மனதையும் 
குளிர்வித்து

ஒவ்வொரு நொடியும் உலகில் எங்கெங்கும் உள்ள உயிர்கள் 
பசியாறும் வண்ணம் உழைக்கும் மண்ணின் நாயகர்கள்
விவசாயிகளுக்கு நல்லதொரு பத்தாண்டாய் அமையட்டும் 

இனிய தமிழ் புத்தாண்டு 
நல் வாழ்த்துக்கள்

பாகா

Monday, April 3, 2017

சூரியனின் சிரிப்பு

நான் சுட்டெரிக்கும் அனல்
என்றுமே கொதிக்கும் தணல் 

சுட்டெரிப்பது என் குணம் 
இன்று நேற்றல்ல கடவுளின் படைப்பில் 
நான் பிறந்ததிலிருந்து

கோடை வரும் பொழுது எல்லாம்
அனைவரும் என்னை கரித்துக்கொட்டுகிறீர்கள்
மரங்களை வெட்டி மனைகளாக்கியது நீங்கள்
ஆனால் பழி என் மேல் 

நான் எதையும் மாற்றிக் கொள்ளவில்லை 
பூமியை இஷ்டப்படி பாழாக்கியது நீங்கள்
எப்பொழுதும் ஒரே மாதிரி கொதிக்கும்
என் பண்பில் நான் அணு அளவும் மாறவில்லை

எங்கும் எதிலும் மாற்றம் என்ற வார்த்தையை 
வைத்துக் கொண்டு இஷ்டப்படி மாற்றினீர்கள் பூமியை
சந்தோசமாக கஷ்டப்பட கற்றுக்கொள்ளுங்கள்

இனியும் திருந்தாவிட்டால் உங்கள் அழிவு
நிச்சயம், மக்களே விழித்தெழுங்கள் 
ஒவ்வொருவரும் உங்களால் முடிந்த அளவு
மரங்களை நடுங்கள் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.......!!!

பாகா