Tuesday, June 27, 2017

தூக்கம் தொலைத்தேன்

விழிகளில் தூக்கம் வரவில்லை 
மனதினில் பாரம் ஒன்று 
இருப்பதினால் விழிகளில் தூக்கம் 
தூரம் விலகிப் போகிறது 

கண்களின் கண்ணீரை கைகளில் 
துடைப்பேன் 
மனதினில் கண்ணீரை எவ்வாறு 
துடைப்பேன் 

இமை என்ற கதவை கண்களுக்கு 
கொடுத்தான்  
மனதிற்கு கதவை கொடுக்க 
மறந்து விட்டான் இறைவன்!

பலநாள் தூக்கத்தை தொலைத்து 
விட்டேன் 
மனதின் குழப்பத்தால் என்னையே 
எனைத் தேடுகிறேன் 

கடவுள் என்னிடம் வரம் கேட்டால்  
மனதில் திரை எனும் ஒரு அணை 
போடாக கேட்டிடுவேன்..!


பாகா 

Monday, June 19, 2017

ஏன் இந்த உணர்வு

தோற்று தோற்று விழுகிறேன் 
இருந்தும் தோல்வி எனக்கு 
பழகவில்லை 

பயந்து பயந்து வாழ்கிறேன் தினமும் 
இருந்தும் பயம் எனக்கு 
பழக வில்லை 

என் மனம் எதையும் நாடவில்லை 
எனக்கு எதன் மேலும்
நாட்டம் இல்லை 

நெஞ்சிற்குள் நான் எதையும் 
நினைக்கவில்லை ஆனால்  சில 
நினைவுகள் என்னை விடுவதில்லை 

காயங்கள் எதுவும் பெற்றதில்லை 
ஆனால் வலியில்லா உணர்வு 
என்றும் எனக்கு இருந்ததில்லை 

வாழ்க்கையில் எதையும் தொலைக்கவில்லை 
ஆனால் என் கையில் 
எதுவுமே இல்லை 


பாகா   

Monday, June 5, 2017

பசி

பணம் கொட்டும் மனிதர்களிடம் இல்லாத
ஒருவன் நான்

நான் இருக்கும் இடத்தில் நோய்கள்
அண்டாது

பணம் படைத்தவர்களிடம் இல்லாத நான்
ஏழைகளின் வீட்டில் அன்றாடம் இருப்பேன்
 
நான் ஏழைகளின் சாபம்
பணக்காரர்களுக்கு நான் ஒரு வரம்!!!

என்னை ஒழிக்க பல தலைவர்கள் வந்தாலும்
உலகளாவி நான் பறந்து விரிந்திருக்கின்றேன் 

இன்னுமா என்னை தெரியவில்லை
நான் தான் பசி..!!

பாகா