Monday, October 23, 2017

நானே போயிடுறேன் கண்ணீருடன்

என்னை விட உன் மேல பாசம்
வைக்க யாருமில்ல
இது வரை நீ போட்ட வேஷம்
எனக்கு தெரிய வில்லை

நான் இல்லை என்று விலகும்
போது படிய வச்ச
உன்னை தேடி நான் வந்தப்ப
ஓடி ஒளிந்து கிட்ட

அப்போவே இது உனக்கு தெரியலயா
உங்க அப்பா அம்மா விரும்ப மாட்டாங்கனு
புரியலயா

என் வழியில் நானும் அப்போ போய் இருப்பேன்
என் வாழ்க்கை இது என்று தானே
நினைத்திருப்பேன்

அப்போ என் வாழ்க்கையை நீயே
முடிவு செஞ்ச
இப்போ தள்ளி விட்டு போறியே நான்
என்ன செய்ய

தேன் தடவின பேச்சால என்னை
மயக்கி வச்ச
இப்போ தினம் தினம் கண்ணீரில
என்னை நீ நனைய வச்ச

நல்லாயிரு என்று சொல்ல நான்
தியாகி இல்ல
நாசமா நீ போயிடுனு சொல்ல நான்
பாவியும் இல்ல

பாகா   

Monday, September 11, 2017

நீரை வீணாக்காதீர்

நான் இன்றி இங்கு எந்த உயிருமில்லை
எனை காணாத எவரும் இவ்வுலகில்
இல்லை


நீர் தானே என்று நீ வீணாக்கினாய்
உன் எதிர்கால வாழ்க்கையை தெரிந்தே
பாழாக்கினாய்


மேகத்தில் இருந்து தான் பிறக்கும் நேரம்
உன் தாத்தாக்கள் என்ன செய்தார்கள்
அந்நேரம்


வீட்டு மாடத்தில் பாத்திரங்கள் திறந்து வைப்பர்
என்னை துளி கூட ஒதுக்காமல் நிரப்பி
உபயோகிப்பர்


நீ இன்று என்னை இப்படி கண்டதுண்டா
நான் சாக்கடையில் கலப்பதும் ஏன்
உனக்கு புரிவதுண்டா


எல்லாமே நீ செய்யும் தவறு மனிதா
உனை நீயே திருத்திக்கொள் உயர்வு
மனிதா

உன் தலைமுறைக்கு இருப்பதால் வீணடிக்கிறாய்
உன் எதிர்கால சந்ததியரின் வாழ்வை
சீரழிக்கிறாய்



பாகா

Monday, September 4, 2017

துணிந்து எழு

துரோகிகள் நம்மை சூழ்ந்து முதுகில் குத்தும் நேரம் 
கிழிந்து போகும் காகிதம் போல் அல்லாமல் 
நெருப்பை உமிழும் எரிமலை போல் பொங்கி எழ வேண்டும் 

நம்மை பிரித்தாளும் துரோகிகளை இனம் கண்டுகொண்டு 
தனி தனியே பிரிந்து விழும் நூலைப்போல் இல்லாமல் 
ஒற்றுமையாக இருந்து ஒளிகொடுக்கும் திரியை போல் 
சேர்ந்து பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும் 

மக்களுக்கு சேவகம் பார்ப்பதற்கே அவர்கள் வேலை 
ஆனால் அதிகாரம் கொண்டு ஒடுக்க நினைத்தால் 
துணிந்து எழுந்து நியாயமான எதிர்ப்பை காட்டுங்கள்  

மாணவப்பிஞ்சுகளே நம் தேசத்தின் தூண்கள் 
குழந்தைகளை மனமுடைய செய்யும் அதிகாரவர்கத்தை ஒடுக்கி 
அனைவரும் சேர்ந்து பாடம் புகட்டுங்கள் 

அதிகாரம் நாம் கொடுத்தது என்பதை அவர்கள் செவிப்பறை 
கிழிய சொல்லுங்கள் 
உங்கள் கோபத்தை அணைய விடாமல் நெருப்புக்கு 
ஆக்சிஜென் கொடுப்பது போல் கோபத்தை அணையாமல் 
கொழுந்துவிட்டு எரிய பார்த்துக்கொள்ளுங்கள் 

அவர்களை செய்யும் தக்க நேரம் வரும் அப்போது மறக்காமல் 
மன்னிக்காமல் செய்யுங்கள்  பிஞ்சின் மனம் சாந்தி அடையட்டும்...

பாகா  

Monday, August 28, 2017

நெல்மணி

மண்ணில் புதைத்து வைத்தாலும்  
நானும் திமிறி எழுந்தேன் உங்களுக்காக 

நான் வளரும் பருவ காலம் பல 
இயற்கை மருந்துகளை கொடுத்து வளர்ந்தேன் 

இப்போது பல செயற்கை மருந்துகளை 
கொடுத்து என்னையும் மண்ணையும் கெடுத்தார்கள் 

எங்கள் பலன்கள் குறையத்துவங்கியதும் 
எங்களை குறை சொன்ன மனிதர்கள் 
இது அவர்களின் தவறு என்று உணரவில்லை 

எங்கள் பருவ காலம் முடிந்து 
அறுவடை காலத்தில் அறுவடை செய்வார்கள் 

எங்களை பிரித்தெடுத்து அடித்து 
சகோதர சகோதரிகளை தரம் பிரித்து வைப்பார்கள்

நாங்கள் பிறந்த வீட்டில் இருந்து 
புகுந்த வீட்டுக்கு செல்வதை போல் நாங்களும் 
தயாராவோம் 

நாங்கள் இவ்வளவு தூரம் கடந்து வந்து 
எங்களை சாப்பிடாமல் வீணடிப்பார்கள்

உங்கள் வீட்டில் நாங்கள் வந்தால் எங்களை 
வீணடிக்காமல் இயலாதவர்களுக்கு கொடுங்கள் 
இப்படிக்கு 
உங்கள் நெல்மணி 


பாகா   

Monday, August 14, 2017

வாழ்க்கை ஒரு பயணம்

முடிவில்லா பயணத்தில் வழியறியா 
பல பாதைகள் 

பாதைகளின் வழி நடுவே பார்த்திடாத 
பல முகங்கள் 

பார்த்து பழகிய சில முகங்களின் மனங்களில் 
மாட்டிய பல முகமூடிகள் 

எது நம் பாதை என அறிவதற்குள் தடுமாறும் 
பல வழித்தடங்கள் 

வெற்றியை நோக்கி நெருங்கும் வேளையில் 
வரும் பல தோல்விகள் 

தோல்வி தான் வரும் என்று நினைத்த வேளையில் 
வரும் பல வெற்றிகள் 

நாம் நினைத்த இடத்தில் இறங்க வாழ்க்கை 
பேருந்து  இல்லை 

காற்றடித்து காற்றின் திசையில் பறக்கும் காகிதம் போல் 
சூழ்நிலை உருவாக்கும் பாதையில் நம்மை அறியாமல் 
செல்வதே நம் வாழ்க்கை பயணம் 

பாகா   

Monday, August 7, 2017

நான் தான் பொய்

நான் இல்லாமல் எவருமே இல்லை 
இவ்வுலகில் 
நன்மைக்காகவோ அல்லது தீமைக்காகவோ 
என்னை உபயோகப்படுத்துவர் பலர் 

என் மீது பயம் கொண்டவர் சிலர் 
அதனால் அவர்கள் வாழ்வில் அடைந்தனர் 
நல்ல பலன் 

நேர்மைக்கு எதிரானவன் நான் 
உண்மைக்கு புறம்பானவன் நான் 
நான் ஒரு முறை உங்கள் வாழ்வில் வந்தால் 
பன்மடங்கு பெருகி வரும் பிரச்னைகள் 

நான் யார்? நான் யார்? 
நான் தான் பொய் 
எனை கொண்டவர் எவரும் இவ்வுலகில் 
உயர்ந்தவரில்லை 

என்னை உணர்ந்து திருந்தியவர் இவ்வுலகில் 
தாழ்ந்தவர் இல்லை 
பொய் கூறி அதை உணர்ந்து திருந்தியவர்களை 
மறந்து மன்னியுங்கள்!!


பாகா  

Monday, July 31, 2017

தனிமை ஓவியா

தனிமை என்ற இன்பத்தை நீ இன்பமாக 
விரும்பினால் அது ஒரு போதை 

மற்றவர்கள் உன்னை அந்த நிலைக்கு தள்ளினால் 
அது உன் வாழ்க்கை வெற்றிக்கான பாதை 

எல்லாருக்கும் நீ செய்வது தவறாகவே தெரியலாம் 
உன் மனதை கேள் அது உண்மை சொல்லும் 

கூடவே  இருந்து நம் உழைப்பை உறிஞ்சு எடுக்கும் 
ஒட்டுண்ணி தாவரமாக இல்லாமல்  தனி ஒரு 
மரமாக நிலைத்து நின்றாய் 

பிறர் போல் நீயும் வாயில்  வந்தவற்றை பேசாமல் 
நல்லதையே பேசும் பொறுமை கொண்டாய் 

பிறர் படும் துன்பத்தை நீ கண்டு துடித்தாய் 
நீ படும் துன்பத்திற்கு யார் ஆறுதல் கூற 
என்று தவித்தாய் 

எது சரி தவறு என்பதை பட்டென சொன்னாய் 
அம்பு போல் உன் உள்ளம் தைத்தவர்களை 
உன் அன்பினாலே வென்றாய் 

எவ்வளவு தான் கஷ்டம் வந்தும் உன் புன்னகையை 
கொண்டு வென்றாய் 

உனக்குள்ளும் உணர்வு உள்ளது என்பதை 
கண்ணீரிலே சொன்னாய் 

குழந்தை போல் நீ எல்லார் மனங்களையும் வென்றாய் 
பல பொன்மொழிகள் எனக்குள் உண்டு நான் 
குழந்தை இல்லை என்றாய் 

அழகு என்றால் புற அழகை என்று சொல்லும் சில பேர் 
இன்று உந்தன் மனஅழகை கண்டு வியந்து நின்றார் 


ஓவியா என்று நீயும் உன் பெயரை சொன்னாய் 
நம் வாழ்க்கை நாம் வரையும் ஓவியம் என்று எங்களுக்கு 
சொன்னாய்.....! 


 பாகா