Monday, May 29, 2017

திங்கட்கிழமை

நேரத்தின் நேரமும்  காலத்தின் காலமும் 
சூழ்நிலையை வைத்தே அது வேகமா செல்கிறதா 
இல்லை தாமதமாக செல்கிறதா என்பது 

நமக்கு பிடித்த தருணங்கள் அனைத்தும் 
வேகமாக செல்வது போலவும் 
நமக்கு வேதனை அளிக்கும் தருணங்கள் 
தாமதமாக செல்வது போலவும் தோன்றலாம் 

அது கால நேரத்தின் தவறு அல்ல 
நம் மனநிலையை பொறுத்தே அமையும் மாயாஜாலம் 

உதாரணமாக திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை 
ஆமை போலவும் 
வெள்ளிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை முயல் போலவும் 

ஒரு மாயாஜால மனநிலையை நமக்கு கொடுக்கின்றன 
வரவேற்போம் திங்கட்கிழமையை சந்தோச மனநிலையுடன்......!

பாகா 

Monday, May 22, 2017

நீ என் பேரழகு

காற்றடித்து பூவில் இருந்து இதழ்கள் பிரிந்து 
விழும் அழகை விட 

அன்பே நீ இதழ் சுளித்து என்மேல் காட்டும் 
கோபம் மிக அழகு 

மலையில் மறைந்து மறைந்து செல்லும் 
மேகக்கூட்டங்களின் அழகை விட 

அன்பே என் மனதில் வந்து வந்து போகும் 
உன் முகம் மிக அழகு 

திடீரென வந்து எனை நனைக்கும் மழையின் 
அழகை விட 

நீ தரும் நொடிப்பொழுது முத்தமழையில் 
நனைந்திடுவது மிக அழகு 

என் நிழல் போல் நீ என்னை தொடர்ந்து வருவதே 
என் வாழ்வில் நான் செய்த பேரழகு 

பாகா 

Monday, May 15, 2017

துவண்டு விடாதே

வாய்ப்புகள் வரவில்லை என்று இருள் 
சூழ்ந்ததைப் போன்று எண்ணாமல் 
முயற்சி என்ற ஒளிவிளக்கை 
எப்போதும் உன்னிடம் வைத்துக் கொள் 

மரத்தைப் போன்று உடைந்து விடாதே 
தோல்வி என்ற காற்று உன்னைத் 
தாக்கும் பொழுது 
பசும்புல்லைப் போல் வளைந்து கொடுத்து 
வெற்றிகளைப் பிடித்துக் கொள் 

துன்பம் வரும் பொழுது கண்ணீர் விட்டு அழு 
ஒரு மெழுகுவர்த்தியைப் போல் 
மெழுகு போல் உன் உழைப்பை உருக்கி 
வெளிச்சம் என்ற இன்பத்தை உன்னை 
நம்பியிருப்பவருக்கு கொடு 

உன்னை நம்பு உன்னை நம்பியிருப்பவர்களை 
நம்பு நம்பிக்கையாய் வாழு.....!

பாகா 

Monday, May 8, 2017

நேர்மறை எண்ணம்

பிரச்சனைகளே வாழ்வாய் 
இருந்த எனக்கு சந்தோசம் 
எனும் தீர்வாய் வந்தாய் 

பயந்து பயந்து வாழ்ந்த 
என்னை தைரியமாக 
வாழ வைத்தாய் 

எதிர்காலத்தை பயந்து பார்த்த 
என்னை நிகழ்காலத்தை 
நினைத்து சந்தோசம் கொள்ள வைத்தாய் 

கெட்டதே நடக்கும் என்று நினைக்கும் 
என் மனதை நல்லதே நினை 
என்று நினைக்க வைத்தாய் 

இறுதி வரை நீ என்னுடன் வரவேண்டும் 
என் உயிர் இறக்கும் வரை நீ 
என்னுடன் வர வேண்டும் 

நல்லதையே நினைக்க வைத்த நீ 
என்னுடன் இறுதி வரை வருவாய் 
என்றே எண்ணத் தோன்றுகிறது...! 

பாகா 

Tuesday, May 2, 2017

காதல் பயம்

இது சாத்தியமா என்று நினைக்கையிலே 
நம் மனதில் உள்ளதை கூறி விட்டோம் 

இரு உயிர்களாய் இருந்த நாம் 
ஓருயிர் ஆகி விட்டோம் 

நீ நான் என்று இருந்த நாம் 
நாம் என்று ஆகிவிட்டோம் 

பார்வையிலே என்னை சீண்டி விட்டாய் 
என் மனதை ஏனோ தூண்டி விட்டாய் 

சிரிப்பினில் என்னை கொன்று விட்டாய் 
அதில் தினம் தினம் எனை திணறடித்தாய்

குழந்தை போன்ற முகத்தை கொண்டு 
குழந்தை போல் எனை பாதுகாத்தாய் 

உன் மூச்சுக் காற்றில் உயிர் வாழ்கிறேன் 
நீ இல்லையேல் நான் ஏனோ வாடுகிறேன் 

வேண்டும் நீ எனக்கு என் வாழ்வில் 
உன் அரவணைப்பில் நான் இவ்வுலகில் 
வாழ வேண்டும் 

நம்பாத போது வராத பயம் 
நம்பும் இந்த நேரத்தில் ஏனோ 
ஒரு இனம் புரியாத பயம் 

வருவாயா என்னுடன் என் வாழ்நாள் முழுவதும் 
இல்லையேல் என் உயிர் மடியும் உன் மடியில்.....

பாகா