Tuesday, February 28, 2017

என்னவன்

என்னவனுக்கு மட்டுமே என்னைத் 
தர வேண்டும் 
அதில் நான் பேரின்பம்  
பெற வேண்டும் 

என்னவன் என்னுடன் மட்டுமே 
வாழ வேண்டும் 
அவனுடன் என் சந்தோசங்களை 
பகிர வேண்டும் 

என் நெஞ்சில் புதைந்துள்ள 
ஆசைகளை எல்லாம் 
அவன் கிளறி எடுத்து 
நிறைவேற்ற வேண்டும் 

நம் வாழ்நாள் முடியும் 
நேரம் வரும் போது 
இருவர் மூச்சும் ஒருசேர 
பிரிய வேண்டும்......!

பாகா 


Friday, February 24, 2017

ஜெயலலிதா அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ்நாட்டின் என்றென்றும் ராணி நீ தான் 
அரசியலில் உன்னை தவிர்த்து ஒன்றுமே இல்லை 
கம்பீரத்துக்கே உருவம் கொடுத்தாய் நீ 

எதிரிகள் கூட்டமாக நின்று எதிர்த்த போது 
தனியாக  நின்று  மக்கள் படையோடு சேர்ந்து 
அவர்களை திக்குமுக்காட செய்தாய் நீ 

எத்தனையோ போராட்டங்கள் 
ஒரு துளி கண்ணீரும் இல்லை உன் கண்களில் 
சிரிப்பினால் வென்றாய் ஒவ்வொரு போராட்டத்தையும் 

மரணம் என்ற எமன் நடத்திய போராட்டத்தில் மட்டுமே 
நீ போராடி இறைவனடி சேர்ந்தாய் நீ தோற்கவில்லை 
எங்கள் இதயங்களில் என்றுமே நீ வாழ்கின்றாய் 

பெற்ற அம்மாவிற்கு அடுத்து உன்னையே அனைவரும் 
அம்மா என்றழைத்தனர், நீ மறைந்தாலும் எங்கள் நெஞ்சில் 
உன் சிரித்த முகம் நீக்கமற நிறைந்து இருக்கிறது...!

இவ்வுலகம் இருக்கும் வரை உன் புகழ் என்றுமே நிலைத்து நிற்கும் 
மக்களின் ராணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

பாகா  

Tuesday, February 21, 2017

மழை மேல் மண் கொண்ட காதல்

நீ என்னைத் தொட்டதும் 
பரவும் வாசனையை பிடிக்காதவர் 
எவரும் இல்லை 

நீ சிரிப்பதை யாரும் ரசித்ததில்லை 
அழுவதை ரசிக்காதவர் எவரும் இல்லை 

நீ வந்து என்னைத் தழுவும் போது 
என் உடலில் சூடு பறந்து போகும் 

நீ என்னை தீண்டியதன் 
விளைவாய் நான் பெற்றேன் 
பல பிள்ளைகளை 

நம் பிள்ளைகளால் இவ்வுலகம் 
தூய்மையான காற்றை சுவாசிக்கும் 

என்மேல் உனக்கு காதல் 
உன்மேல் எனக்கு காதல் 
நம்மேல் அனைவருக்கும் காதல் 

பாகா  

Friday, February 17, 2017

கடவுளுக்கு ஒரு கடிதம்

மனித ஜென்மம் கொடுத்ததற்கு நன்றி 
சந்தோசமாய் கழிந்தது 
என் சிறுவயது 

உடன்பிறப்புகளுடன் மகிழ்ச்சியாய்  கழிந்தது 
என் பருவ வயது 

பல கனவுகளுடன் இருந்தேன் 
கல்யாண வயதில் 

அழகானவனை எதிர்பார்க்கவில்லை 
நல்ல குணமானவனை பார்த்திருந்தேன் 

வந்தவனோ நல்ல குடிமகன் 
பிடிக்காமல் திருமண வாழ்வில் நுழைந்தேன் 

கிடைத்ததை பிடிக்க பழகிக் கொண்டேன் 
அவனின் குடியோ முற்றியது 

சந்தேக நோயும் வந்துவிட்டது 
சொல்ல முடியாத துயரங்களை 
நான் அனுபவித்தேன் 

புத்தி முத்தி போய்  சேர்ந்தான் 
இந்த உலகை விட்டு 

நான் குழந்தைகள் தெருவில் நிற்கின்றோம் 
கண்ணீருடன் வேண்டுகிறேன் மனித 
பிறவியே வேண்டாம் இறைவா.........


பாகா  

Tuesday, February 14, 2017

காதலின் அழகு

அழகு என்பது 
பார்வைகளின் மொழி அல்ல 
மனதின் உணர்வுகளை புரிந்து 
கொள்வதன் மொழி....

பாகா 


Monday, February 6, 2017

விழுந்து விட்டேன்

என் உயிரை நான் தேடுகிறேன்
அதை ஏன் உன்னுள்
ஒளித்துக்கொண்டாய்

என் மூச்சுக்காற்றை தேடுகிறேன்
அதை முழுவதும் ஏன் நீயே
நிரப்பிக்கொண்டாய்

என் நினைவுகள் அனைத்தையும்
மறந்து விட்டேன் நீ மட்டும்
ஏன் நினைவில் நிற்கிறாய்

என் இதயத்தை நீயே
திருடி விட்டு அதை ஏன் மறுபடி
தர மறுக்கிறாய்

என் நிழல் கூட உன்னையே
பின் தொடர்கிறது
ஒன்றும் புரியாமல்

என்னையும் அறியாமல்
விழுந்து விட்டேன்
உன்னிடத்தில் என்னைக்
கொடுத்து விட்டேன்.....!!

பாகா


Friday, February 3, 2017

வருவாயா

எங்கடா இருக்கிறாய்
என்று நீ இங்கே வருவாய்
எப்போது என்னுள் உன்னை கலப்பாய்

உனக்காக நானும் காத்திருக்கிறேன்
நீ என்று வருவாய் என
கண்கள் பூத்திருக்கிறேன்

வருடங்கள் பல கழிந்த பின்னும்
ஏன் இன்னும் என்னிடம் நீ
சேரவில்லை

தேசம் தாண்டி சென்றாயே
வேலைக்காகவா இல்லை
என்னை கள்ளக்காதலியாக்கும்
நிலைக்காகவா

நான் வேறு ஒருவருடன் சேர மாட்டேன்
நீ வராவிட்டால் நான் இவ்வுலகில்
வாழ மாட்டேன் என்று வருவாய் காதலா
என் கழுத்தில் மாலையிட வருவாயா
அல்ல என் மேல் மாலையிட வருவாயா .....!

பாகா